திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற புனித தலமான சபரிமலைக்கு கடந்த 29ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை மொத்தம் 22 லட்சம் ஐயப்ப சுவாமி பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 4.51 லட்சம் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.
இதுகுறித்து திருவிதாங்கூர் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோயிலின் வருமானம் ரூ.22.76 கோடி அதிகரித்துள்ளது.
கடந்த 29 நாட்களில் மொத்தம் 22,67,956 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்த வருமானம் ரூ.163.89 கோடி, இதில் அரவணை (பிரசாதம்) விற்பனை மூலம் ரூ.82.67 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.