இந்தியாவில் கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு கோவில்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருத்தலங்களில் பண்டிகைகள், விழாக்கள், தேரோட்டம் ஆகியவை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பூஜையை முன்னிட்டு கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஐயப்பன் கோயிலின் கருவறையை திறந்து வைக்க இருக்கிறார். இதை தொடர்ந்து இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளை (ஜூலை 17) அதிகாலை 5 மணிக்கு திருக்கோவில் வழக்கம் போல திறக்கப்பட்டு காலையில் நெய்யபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆடி மாத சிறப்பு பூஜையாக உஷபூஜை, கணபதி ஹோமம், படி பூஜை உதயாஸ்தமன பூஜை போன்றவைகளும் நடத்தப்பட இருக்கின்றன. இந்த பூஜைகள் மற்றும் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு துவங்கி இருக்கிறது. மேலும், நிலக்கல் பகுதியில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh