திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பின. 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 74 ஆயிரத்து 583 பேர் தரிசனம் செய்த நிலையில், 3 கோடியே 57 லட்ச ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1