Sunday, January 26, 2025

ரூ.7,261 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப வரவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்

- Advertisement -

ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. அப்போது ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்த விவகாரத்தில், கடந்த 30ம் தேதி வரை, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாகவும், ரூ.7,261 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!