டெல்லியில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் இரண்டு நாட்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் பல குழந்தைகளும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். டெல்லி அரசின் அமைச்சரான அதிஷி, பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் டெல்லி காவல்துறையின் உதவியுடன் உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஜிஎன்சிடிடி சார்பில் உடனடியாக இழப்பீடு வழங்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.