அக்டோபரில் சாதனை ஜிஎஸ்டி வசூல்.. ரூ.1.87 லட்சம் கோடியாக பதிவு..!
அக்டோபர்-2024க்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.9 சதவீத வளர்ச்சியும், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் பதிவானது.
ஜிஎஸ்டி வசூலான ரூ.1,87,346 கோடிகளில், ரூ.33,821 கோடிகள் சிஜிஎஸ்டியிலிருந்தும், ரூ.41,864 கோடிகள் எஸ்ஜிஎஸ்டியிலிருந்தும், ரூ.99,111 கோடிகள் ஐஜிஎஸ்டியிலிருந்தும். மேலும் ரூ.12,550 கோடி செஸ்களாக வந்தது. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, சிறந்த பொருளாதார செயல்பாடு மற்றும் வரி வசூல் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.
உள்நாட்டு பரிவர்த்தனைகள் 10.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி 4 சதவீதம் அதிகரித்து ரூ.45,096 கோடியாக உள்ளது.
2024 காலண்டர் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.12.74 லட்சம் கோடி. 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ.11.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 9.4 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.