ஜூலை 4 முதல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு – வோடாஃபோன் ஐடியா அறிவிப்பு
லோக்சபா தேர்தலுக்கு பின், மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வந்தன. அதன்படி தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 27 அன்று, ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 11% முதல் 21% வரை உயர்த்துவதாக அறிவித்தது. இதற்குப் பிறகு ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை 10% முதல் 25% வரை உயர்த்துகிறது.
இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து, தற்போது வோடாஃபோன் ஐடியா (VI) நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்தன. இப்போது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
Posted in: இந்தியா, தொழில்நுட்பம், வணிகம்