நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு உடையவர்கள் தங்களுடைய வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை மாற்றலாம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை மாற்றலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டும். தற்போது கோடை என்பதால் வங்கிகளுக்கு வருபவர்களின் நலன் கருதி நிழலான இடங்களில் வசதிகள் ஏற்படுத்திருக்க வேண்டும். இதோடு ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.