rbi governor 3

கிரிப்டோ கரன்சி சூதாட்டம் போன்றது – ரிசர்வ் வங்கி கவர்னர்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மீண்டும் கிரிப்டோ கரன்சி குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இவற்றை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார்.

கிரிப்டோ கரன்சி என்பது சூதாட்டம் போன்றது என்றும், அவற்றுக்கு மதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அதற்கு மதிப்பு இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள் என்றார். அனைத்து கிரிப்டோ நாணயங்களும் போலியானவை. எந்தவொரு சொத்து அல்லது நிதி தயாரிப்புக்கும் உள்ளார்ந்த மதிப்பு இருக்க வேண்டும், ஆனால் கிரிப்டோஸ் விஷயத்தில் அத்தகைய மதிப்பு இல்லை, அது ஒரு மாயை என்று கூறினார். நம் நாட்டில் சூதாட்டத்திற்கு அனுமதியில்லை… பணத்தின் பெயரில் நடக்கும் சூதாட்டத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாத என்றார்.

கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சியை எதிர்கொள்ள, மத்திய வங்கி சமீபத்தில் தனது இ-ரூபாய் அல்லது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை (CBDC) பைலட் முறையில் அறிமுகப்படுத்தியது. சக்திகாந்த தாஸ், இந்த CBDC பணத்தின் எதிர்காலம் என்றும், இதை ஏற்றுக்கொள்வது தளவாடங்கள் மற்றும் அச்சிடும் செலவுகளைச் சேமிக்க உதவும் என்றும் கூறினார்.