இந்தியாவில் ரேஷன் கார்டு தொடர்பான பல தகவல்கள் சமீப காலமாக பரவி வருகிறது. இது குறித்து அரசும் விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலையில் நாம் ரேஷன் கார்டு விதிகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. அதனால் விதிகள் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றன. இதன் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதனை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியற்றவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது. அவ்வாறு ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை உத்தரபிரதேச அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இது குறித்து முழு விளக்கமும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியாது. அதே போல குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் இருந்தால் நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களும் பயன் பெற முடியாது என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் , ஜூன் 19 முதல் 30 வரை கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. இம்முறையும் அதே போல வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh