
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மரணச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. இதனிடையே, ரத்தன் டாடாவின் மறைவுக்கு மகாராஷ்டிர அரசு மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரித்துள்ளது.
மேலும் ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மதியம் அவசரமாக கூடிய மகாராஷ்டிர அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
முதலில் ரத்தன் டாடாவுக்கு அமைச்சரவை இரங்கல் தெரிவித்தது. இதையடுத்து, தேசத்துக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசிடம் முறையிட அமைச்சரவை முடிவு செய்தது.