தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை அரசு நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரியில் தீபாவளி பரிசாக வரும் 21ம் தேதி முதல் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.