-Advertisement-
கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் அதிகாலை 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து நிகழ்வுகளும் வெளியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.
-Advertisement-
குளிர் கால நிலையை தவிர்க்கும் வகையில் இரவு மற்றும் அதிகாலை கூட்டங்களுக்குப் பதிலாக பகல்நேரங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் திரையரங்குகளில் N-95 முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் இல்லையேல் அனுமதி இல்லை என்ற பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பார்கள், உணவகங்கள் மற்றும் பஃப்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
-Advertisement-