புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, பிரதமர் மோடியின் மருத்துவச் செலவு குறித்து பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் அலுவலகம், அனைத்து மருத்துவச் செலவுகளையும் பிரதமரே ஏற்றுக்கொள்கிறார் என்றும், இதற்கு அரசு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான இந்தியா இயக்கம் குறித்த செய்தியை மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி, 135 இந்தியர்களையும் முன்மாதிரியாக கொண்டு ஆரோக்கியமாக இருக்க மோடி ஊக்குவித்து வருகிறார்.
பிரதமர் அலுவலகப் பணிகளைச் செய்ய எந்த வரி செலுத்துவோரின் பணமும் பயன்படுத்தப்படவில்லை, இது ஆட்சியின் மீது எங்களுக்குள்ள நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார்.
Leave a Comment