பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த அல்பானீஸ், நேற்று அகமதாபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்த்து ரசித்தார். பின்னர் மும்பை சென்ற அவர் இந்தியா-ஆஸ்திரேலியா தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் பங்கேற்றார்.
- Advertisement -
அதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.