நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டுடன், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.