கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று வயநாடு செல்ல உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, டெல்லியில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் கண்ணூருக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் வயநாடு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து மீட்பு பணியின் நிலை குறித்து கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.