மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் மீரட்-லக்னோ (உத்தர பிரதேசம்), மதுரை-பெங்களூரு (கர்நாடகா) மற்றும் சென்னை-நாகர்கோவில் (தமிழ்நாடு) வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.
இந்த மூன்று வந்தே பாரத் ரயில்கள் அந்தந்த வழித்தடங்களில் பயண நேரத்தை ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.