பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். இந்த அரசுமுறை பயணம் செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நீடிக்கும். வில்மிங்டனில் நடைபெறும் 4வது குவாட் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் 21ஆம் தேதி குவாட் கூட்டத்தை நடத்துகிறார். குவாட் மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்படும். இதற்கிடையில், அடுத்த ஆண்டு குவாட் நாடுகள் மாநாட்டை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
குவாட் மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் மோடி நியூயார்க்கில் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். ஐநா கூட்டத்திற்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்பில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.