அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிலோ மீட்டர் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன் லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு, எம்இஎம்யு பணிமனைகளையும் திறந்து வைக்கிறார்.
கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலால் பயண நேரம் 6.30 மணியில் இருந்து 5.30 மணியாகக் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
