78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11-வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தவிர சினிமா, அரசியல், விளையாட்டு துறை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இதனை முன்னிட்டு இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் மழை பொழிந்தனர்.