புதன்கிழமை மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்படவிருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தொடங்கியது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த ராக்கெட் ஏவுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனா குறித்து முக்கியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த ராக்கெட் மூலம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ப்ரோபா 3 மிஷன் ஏவப்படுகிறது. இந்த ஏவுதல் வெற்றி பெற்றால் மேலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் நம்மால் ஏவப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.