புதுச்சேரியில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை என அரசு அறிவித்தது. இது முதற்கட்டமாக வழிபாட்டு தலங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான செயலாக்க முறைகள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், அனைத்து ஊழியர்களும் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். அத்துடன் கொள்முதல் பிரிவு ஊழியர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
அத்துடன் பணியாளர்கள் கண்ணாடி பாட்டில்களை குடிநீர் பாட்டில்களாக பயன்படுத்த வேண்டும். இதே போல் தொழிற்சாலையின் நுழைவாயிலில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஊழியர்கள் யாரும் தொழிற்சாலைக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும் இதனை நுழைவுவாயிலில் இருக்கும் காவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Comment