PNB வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை.. செயல்படாத கணக்குகள் ஜூன் 1 முதல் மூடப்படும்..!

 

பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத கணக்குகள் இந்த மாத இறுதிவரை மட்டுமே செயல்படும் என்றும், மேலும் KYC முடிக்காத கணக்குகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் (கேஒய்சி) செயல்முறை மே 31க்குள் முடிக்கப்படாத கணக்குகள், கடந்த மூன்று ஆண்டுகளாக பரிவர்த்தனைகள் மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் கணக்குகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

அதே நேரத்தில் டீமேட் கணக்குகள், லாக்கர்களுடன் இணைக்கப்பட்ட கணக்குகள் அல்லது செயலில் உள்ள கணக்குகள், 25 வயதுக்குட்பட்ட மாணவர் கணக்குகள், சிறு கணக்குகள், பல்வேறு திட்டங்களைச் சேர்ந்த கணக்குகள், நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்ட கணக்குகள், வருமான வரித்துறை மற்றும் சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

செயல்படாத கணக்குகள் தொடர, மே 31க்குள் KYC ஆவணங்களை வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். செயலிழந்த கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

 
 
Exit mobile version