குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இந்த குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக குவாட் செயல்படுகிறது. இதன்போது பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா- ஜப்பான் நாடுகளின் பிரதமர்களை சந்திப்பு பேசவுள்ளார்.
நாளை நியூயார்க் நகரில் அமெரிக்க முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார். இதன்போது செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு கூட்டு முயற்சி பற்றி விவாதிக்கிறார். இதற்கு அடுத்த நாள் 23ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.