பி.எம். கிசான்: விவசாயிகளுக்கு 16வது தவணை எப்போது? வெளியான முக்கிய தகவல்!!

 

நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் மந்தன் யோஜனா (PM KISAN) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ,6,000 உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திட்டத்தின் 15 வது தவணை, கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து 2024 புத்தாண்டை முன்னிட்டு 16வது தவணை விரைவில் கிடைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படலாம் என வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 
 
 
Exit mobile version