மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் இன மக்கள் தங்களுக்கு ST அந்தஸ்து வழங்க வேண்டும் என போராடி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுபுறம் மலைவாழ் பழங்குடி மக்கள் போராடி வந்தனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையானது.
இதன் காரணமாக எக்கச்சக்கமானோர் படுகாயம் அடைந்தும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் 10,000க்கும் மேற்பட்ட ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மணிப்பூரில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் தாக்குதல் பயத்தால் தடைபட்டுள்ளது. எனவே உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170 ஆகவும், சமையல் எரிவாயு கள்ளச்சந்தையில் மட்டுமே கிடைப்பதால் அதனின் விலை ரூ.1,800 ஆகவும், அரிசி மூட்டை ரூ.900 லிருந்து ரூ.1,800 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மணிப்பூர் மாநில மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.