அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இனி, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு KYC விதிகளின்படி பான் மற்றும் ஆதார் அட்டையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்புத் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் சேருபவர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து, அட்டை வழங்கப்படும் என காத்திருப்போர், தங்களது ஆதார் பதிவு எண்ணை அளித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.