புதுச்சேரியில் 19 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு, திருக்கனூர், நந்தமேடு, செட்டிபட்டு, பண்டசோழநல்லூர், பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம், முத்தியால்பேட்டை, பனித்திட்டு, நத்தமேடு, பாகூர் கொம்பூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.