பாஸ்போர்ட் சேவை போர்ட்டல் (Passport Seva) பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் பாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு கிடைக்காது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பாஸ்போர்ட் சேவைகள் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) காலை 6 மணி வரை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advisory – Passport Seva portal will be unavailable from 2000 hrs (29.8.2024) till 0600 hrs (2.9.2024) due to technical maintenance. @SecretaryCPVOIA @MEAIndia @CPVIndia pic.twitter.com/PzZnBMvGcP
— PassportSeva Support (@passportsevamea) August 25, 2024
புதிய பாஸ்போர்ட் பெற, பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்தல் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்ய இந்த ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை போர்டல் பயனுள்ளதாக இருக்கும். பாஸ்போர்ட் மையங்களில் அவசரம் காரணமாக மணிக்கணக்கில் காத்திருக்காமல் ஆன்லைன் போர்ட்டல் மூலம் அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்து நேரடியாக அந்த நேரத்திற்கு செல்லலாம்.
இதற்கிடையில், தொழில்நுட்ப பராமரிப்பின் ஒரு பகுதியாக, ஆன்லைன் போர்ட்டல் ஐந்து நாட்களுக்கு கிடைக்காது, எனவே பாஸ்போர்ட் சேவைகளைப் பெற விரும்புவோருக்கு சில சிரமங்கள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.