நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தலை நடத்துவதற்காகவும், தேர்தல் செலவினங்களைக் குறைப்பதற்காகவும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு செப்டம்பர் 2 ஆம் தேதி குழு ஒன்று அமைக்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இப்படி இருக்க ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான முதல் ஆய்வுக்கூட்டம் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
