இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 893 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 530-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
1 லட்சத்து 36 ஆயிரத்து 478 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 29 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 419 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 205 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரத்து 408 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh