உலகளவில் கொரோனா புதிய வகை மாற்றங்களுடன் பல உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து நோய் பரவலை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த வைரஸ் தற்போது ஒடிசாவில் 3 நபர்களை தாக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக வெளிநாடு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை தீவிரபடுத்த மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முகக்கவசம், பூஸ்டர் தடுப்பு மருந்து என பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்நேரத்தில் கொரோனா ஒமிக்ரான் BF.7 பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது தற்போது பரவி வரும் கொரோனா ஒமைக்ரனின் XBB திரிபு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் மக்களிடேயே பரவும் தன்மை உடையது. மேலும் இவை டெல்டா திரிபை விட 5 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மத்திய சுகர்த்தரத்துறை XBB திரிபு என்பது உண்மையல்ல, மக்கள் இதுபோன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது.