இந்தியாவின் முன்னனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான Ola Electric ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதிய வண்ணத்தில் அதன் ஓலா S1 ‘Holi Special Edition’ ஸ்கூட்டரை அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். Holi Special Edition வெறும் 5 யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படவுள்ளது. நிறத்தை தவிர சராசரி ஓலா ஸ்கூட்டர்களில் இருக்கும் அதே வசதிகளுடன் Holi Special Edition வெளியாக உள்ளது.