நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்வதை பார்த்து சிலர் பொறாமைப் படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இவ்வாறு சிலர் பொறாமைப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மற்றொரு கேள்விக்கு தமிழில் பதில் அளித்த அவர், வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை மத்திய அரசு ரத்து செய்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
