நிஃபா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள், மதரஸாக்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிலைமை கட்டுக்குள் வராததால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள் மற்றும் கூட்டங்களை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
