ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய விதி!
ரயில்வே டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு காலம் (ARP) 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய ரயில்வே அக்டோபர் 16ஆம் தேதி பயணிகளுக்குத் தெரிவிக்க சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், அதிகரித்து வரும் டிக்கெட் இல்லாத போக்கை குறைக்கும் நோக்கத்திலும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in: இந்தியா