கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் ‘கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றனர்.
இந்த ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் செலுத்திக்கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக்குழுவின் கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh