இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான JEE மற்றும் JEE Advanced நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.