கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பால் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த மலப்புரத்தை சேர்ந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், கடந்த 27-ம் தேதி அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கோழிக்கோடு வந்ததாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதார அமைச்சர் திருமதி.வீணா ஜார்ஸ் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh