டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, ரோஹித் ஷர்மாவின் சிறப்பான தலைமை பண்பையும், அவரது டி20 சாதனைகளையும் பாராட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோலியின் இன்னிங்ஸ் மற்றும் இந்திய அணிக்கான அவரது பங்களிப்புக்கும் பாராட்டு தெரிவித்த அவர், ஹர்திக் பாண்டியாவின் இறுதி ஓவர், சூர்யகுமாரின் கேட்ச்சை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.