தொடர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதோர் இடையே கடந்த 3-ம் தேதி தொடங்கிய மோதல் தற்போது மிகப் பெரிய கலவரமாக மாறியுள்ளது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்திய அவர் இரவு ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
3 நாட்கள் தங்க உள்ள அமித் ஷா, உயர் ராணுவ அதிகாரிகள், செல்வாக்கு மிக்க சமூகத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரைம் சந்தித்து வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
