பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ கடந்த 2022 அக்டோபர் 1ஆம் தேதி சுய உதவிக் குழுக்களுக்கான சமூக சக்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சுய உதவி குழுக்கள் குறைந்த வட்டியில் கடன்களை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு ரூ. 3 முதல் 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 7% வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது.
மேலும் 5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு 9% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, 8.71 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ. 24,023 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி 10 லட்சம் வரையிலான கடனுக்கு எந்த மார்ஜின் அளவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புபவர்கள் 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையுள்ளது.
Leave a Comment