புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி Rouse Avenue நீதிமன்றத்தில் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவை மேலும் 7 காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சிசோடியாவின் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.