கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடப்பு சீசனில், நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (டிசம்பர் 27) நடக்கிறது. இதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை சபரிமலை தேவஸ்தானம் செய்துள்ளது.
