
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. இன்று (ஜனவரி 14) மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று மாலை 6.30 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது, பொன்னம்பல மேட்டில் ஐயப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். இதையொட்டி அங்கு ஏராளமான பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.