LPG சிலிண்டர் மானியம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!!

 

உஜ்வாலா எல்பிஜி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் மானியம் ரூ.300ஐ மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய அரசு 2016 முதல் உஜ்வாலா சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் மூலை முடுக்கிலும் உள்ள ஏழை மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் வகையில் முன்பணம் எதுவும் இல்லாமல் சிலிண்டர் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மக்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களைப் பெறலாம்.

 

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரையிலும் ஒன்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு சிலிண்டர் மானியத்தை ரூபாய் 300 ரூபாயாக உயர்த்தியது. மேலும், திட்டமானது 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version