ஆதார் இருந்தால் மட்டுமே லட்டுகள்.. தெளிவுபடுத்திய TTD!
திருப்பதி லட்டுப் பிரசாதங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தரிசன டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே லட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முக்கிய முடிவை எடுத்துள்ளது. பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான லட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தரிசன டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே லட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பக்தர்களுக்கு தரிசன டோக்கனில் ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மற்றொரு லட்டு வழங்கப்படும். டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டும் அவசரத்துக்கு ஏற்ப 4 முதல் 6 வரை கூடுதல் லட்டு வாங்கும் வசதி அளிக்கப்படும். ஆன்லைனில் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்த பிறகே லட்டு வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து இஓ வெங்கையா சவுத்ரி கூறியதாவது:-
சிலர் டிக்கெட் மற்றும் டோக்கன் இல்லாமல் லட்டுகளை வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்வதை கவனித்துள்ளோம். அதனால்தான் டோக்கன் இல்லாதவர்களுக்கு ஆதார் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார். புரோக்கர்களை நிறுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.