68வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் ஜூலை 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டனர். புதுதில்லியில் செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு 305 திரைப்படங்கள் திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் 2020 ஆம் ஆண்டிற்கான வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு திரைப்பட நடுவர் குழுவிற்கு திரைப்பட தயாரிப்பாளர் விபுல் ஷா தலைமை தாங்கினார். இந்த விருதுகளை ஜூரி உறுப்பினர் தரம் குலாட்டி அறிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் விழாவில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படவுள்ளது.
குறிப்பாக 3 தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளன.
அதன்படி, ‘சூரரைப் போற்று’, ‘மண்டேலா’ படங்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படம், படத்தொகுப்பிற்கான விருதுகள் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டன.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh