இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழக்கமான ரேஷன் பொருட்கள் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் கேரள மாநிலத்தில் இளஞ்சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களும், மஞ்சள் நிற அட்டைதாரர்களும் 2 ஆண்டுகளாக பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தின் காலம் முடிவுக்கு வந்துள்ளதால் ரேஷன் கடைகளில் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநில அரசு ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இளஞ்சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது 4 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.